மாநில அளவில் நாகை முதலிடம்


மாநில அளவில் நாகை முதலிடம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் (தழும்பில்லா அறுவை சிகிச்சை) மாநில அளவில் நாகை முதலிடம் பிடித்துள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் (தழும்பில்லா அறுவை சிகிச்சை) மாநில அளவில் நாகை முதலிடம் பிடித்துள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

விருது வழங்கும் விழா

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் விஸ்வநாதன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ஜோஸ்பின் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சாந்தி வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் கூறியதாவது:-

142 ஆண்களுக்கு.....

நாகை மாவடத்தில் 142 ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து மாநில அளவில் நாகை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. குடும்ப நல அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக ரூ.3,900 வழங்கப்படுகி்றது.

குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய ஊக்குவித்த, காரணமாக இருந்த 131 நபர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இதனால் தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கேடயம்

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் முதலிடம் என்ற இலக்கை அடைவதற்கு சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.. மேலும் இது போன்று பல பணிகளில் மென்மேலும் உயர்ந்து பல இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கேடயத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story