பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் நிரம்பியது
பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் நேற்று நிரம்பி மறுகால் பாய்ந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே நெல்லை- தென்காசி சாலையில் மகிழ்வண்ணநாதபுரம் பஸ் நிறுத்தத்தை அடுத்து நாகல்குளம் உள்ளது. தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் கடந்த பல நாட்களாக பெய்த மழையால் இந்த குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் குளம் நேற்று நிரம்பி மறுகால் பாய்ந்தது. அங்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர். நாகல்குளம் இந்த ஆண்டில் 4-வது முறையாக நிரம்பி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த பகுதியில் நெல் சாகுபடி பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
Related Tags :
Next Story