நாகேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாகேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.
கரூர்
வெள்ளியணையில் உள்ள ஓம் நாகேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்படி அன்று இரவு ஊர் பொது கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.தொடர்ந்து நாகேஸ்வரி அம்மனுக்கும், பரிகார தெய்வங்களுக்கும் புனித நீர், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்று மாலை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராடுதலுடன் கரகம் பொது கிணற்றில் விடப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
Related Tags :
Next Story