நாகூர் தர்கா பரம்பரை கலிபா பொறுப்பேற்பு


நாகூர் தர்கா பரம்பரை கலிபா பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக தர்காக்கள் பேரவையின் மாநில கவுரவ தலைவராக நாகூர் தர்கா பரம்பரை கலிபா பொறுப்பேற்பு

நாகப்பட்டினம்

நாகூர்:

தமிழக தர்காக்கள் பேரவை சார்ப்பில் நாகூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜனாப் அல்தாப் ஹுசைன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜனாப் லியாகத் அலி முன்னிலை வகித்தார். தமிழக தர்காக்கள் பேரவையின் கோரிக்கையை ஏற்று மாநில கவுரவ தலைவராக நாகூர் தர்கா பரம்பரை கலிபா முதன்மை டிரஸ்டி டாக்டர் கலிபா மஸ்தான் சாஹிப் பொறுப்பேற்று கொண்டார். கூட்டத்தில் தமிழக தர்காக்கள் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக தர்காக்கள் பேரவையின் நாகை மாவட்ட தலைவர் ஜனாப் நிஜாம் சாஹிப் நன்றி கூறினார்.


Next Story