கந்தூரி திருவிழாவை முன்னிட்டுநாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி


கந்தூரி திருவிழாவை முன்னிட்டுநாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Dec 2022 12:45 AM IST (Updated: 23 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாளை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

நாகப்பட்டினம்

கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாளை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

நாகூர் தர்கா

நாகை மாவட்டம் நாகூரில் ஆண்டவர் தர்கா உள்ளது. உலக பிரசித்திப்பெற்ற இந்த தர்காவில் பிரார்த்தனை செய்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 466-வது ஆண்டாக கந்தூரி விழா நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

பாய்மரம் ஏற்றப்பட்டது

இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. தர்கா பரம்பரை கலிபா 'துவா' ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது, அதைத்தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிக்கொடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசலில் உள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, முதுபக் மினரா, ஒட்டு மினரா ஆகிய மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள், ஆலோசனைக்குழு தலைவர் முகமது கலிபா சாஹிப், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story