நாகூர்: ஸ்ரீ கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
நாகூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமிர்தா நகர் ஶ்ரீ கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகரில் பிரசித்தி பெற்ற கங்கை முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூன்றாம் ஆண்டு திருவிழா கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால் காவடி ஊர்வலம் இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.
நாகூர் பண்டக சாலை தெருவில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பால் காவடி, அலகு காவடி, ரத காவடிகளை எடுத்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.
பக்தர்கள் ஶ்ரீ கங்கை முத்து மாரியம்மன் கோவிலை வந்து அடைந்த உடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story