வேலூர் மத்திய ஜெயிலில் முருகனுடன் நளினி சந்திப்பு


வேலூர் மத்திய ஜெயிலில் முருகனுடன் நளினி சந்திப்பு
x

வேலூர் மத்திய ஜெயிலில் முருகனுடன் நளினி சந்திப்பு நடந்தது.

வேலூர்


வேலூர் மத்திய ஜெயிலில் முருகனுடன் நளினி சந்திப்பு நடந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார்.

முருகன் தனக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை மட்டும் சாப்பிட்டு வருகிறார். தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள், அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று காலை கோர்ட்டு உத்தரவின்படி நளினி-முருகன் சந்திப்பு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் நடைபெற்றது. இதையொட்டி பிரம்மபுரத்தில் இருந்து மாவட்ட குற்றஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் நளினியை வேனில் பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் காலை 11 மணி முதல் 12 மணி வரை முருகனை சந்தித்து பேசினார். அப்போது முருகன் உண்ணாவிரதத்தை கைவிடும்படி நளினி அறிவுறுத்தியதாகவும், இருவரின் விடுதலை தொடர்பாக பேசிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story