வேலூர் மத்திய சிறையில் நளினி -முருகன் சந்திப்பு
விடுதலைக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வேலூர் மத்திய சிறையில் நளினி, முருகனை சந்தித்து பேசினார்.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளார். இவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்தார். அவர் தன்னுடைய தாயார் பத்மாவை பார்த்துக் கொள்வதற்காக பரோலில் வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார்.
15 நாட்களுக்கு ஒரு முறை நளினியும் -முருகனும் ஜெயிலில் சந்தித்து பேசிவருகின்றனர். தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனை நளினி சந்தித்து பேசினார். அப்போது தான் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story