முருகனுக்கு பரோல் வழங்கக்கோரி நளினியின் தாயார் மேல்முறையீடு
வேலூர் ஜெயிலில் உள்ள முருகனுக்கு பரோல் வழங்க நளினியின் தாயார் மேல்முறையீடு செய்துள்ளார்.
வேலூர்
வேலூர் ஜெயிலில் உள்ள முருகனுக்கு பரோல் வழங்க நளினியின் தாயார் மேல்முறையீடு செய்துள்ளார்.
பரோல்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போது நளினி பரோலில் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார். இந்தநிலையில் முருகனுக்கு 6 நாள் அவசரகால விடுப்பு (பரோல்) வழங்கக் கோரி நளினியும், நளினியின் தாயார் பத்மாவும் சிறைத் துறைக்கு மனு அளித்திருந்தனர். இந்த மனுவை ஜெயில் சூப்பிரண்டு கடந்த மாதம் 28-ந் தேதி நிராகரித்தார். முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பரோல் வழங்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
மேல்முறையீடு
இந்தநிலையில் முருகனின் பரோல் தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத் துறைத் தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பரோலில் உள்ள எனது மகள் நளினிக்கு பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு பல் தொடர்பாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனக்கு வயது மூப்பு காரணமாக நளினியை பராமரிக்க முடியவில்லை. முருகன் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் வந்தது இல்லை. மேலும் முருகன் மீது எந்த வழக்கும் எந்த கோர்ட்டிலும் நிலுவையில் இல்லை.
ஆகவே சிறைக் கண்காணிப்பாளர் எனது மனுவை நிராகரித்து உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து தனது மகளின் கணவரான முருகனுக்கு 6 நாள் அவசரகால விடுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.