நல்லமாகாளியம்மன் கோவில் திருவிழா


நல்லமாகாளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவில் திருவிழா

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் வருஷாபிசேக உற்சவ திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலூர் கோவில் இருந்து சாமி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொறிதல் மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதேபோல் நேற்று மாலை சித்தேரிகுளம் கரையில் இருந்து முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story