நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு


நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில்  பழைய மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் 1995 -1996 ஆம் ஆண்டில் பயின்ற மாணவ- மாணவிகள் சந்திப்பு நடந்தது. அப்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்ததுடன், தங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய 2 மாணவிகளுக்கு மாணவர்கள் முத்துவேல், நமச்சிவாயம் ஆகியோர் இணைந்து நிதி உதவி வழங்கினா். மேலும் பள்ளிக்கூடத்துக்கு 5 பெஞ்சுகள் வழங்கினா். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் திருநீலகண்டன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


Next Story