நாலுமாவடி பஞ்சாயத்து புதிய துணைத்தலைவர் தேர்வு


நாலுமாவடி பஞ்சாயத்து புதிய துணைத்தலைவர் தேர்வு
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலுமாவடி பஞ்சாயத்து புதிய துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து காலியாக இருந்து துணைத்தலைவரை தேர்வு செய்ய பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் வார்டு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் 3-வது வார்டு உறுப்பினர் மேரி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதில் ஊராட்சி செயலாளர் வெள்ளத்துரை, உறுப்பினர்கள் தங்கராஜ், முகைதீன் பெனாசிர், சுரேஷ் ராஜா, இசக்கியம்மாள், திருமால், ரத்தினம், குமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story