நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்
நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடக்கிறது.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபகர் மோகன் சி. லாசரஸ் புது வாழ்வு பன்நோக்கு மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. இம் முகாமில் மார்பகத்தில் கட்டி மற்றும் வலி இருந்தாலோ, குடும்பத்தில் வேறு யாருக்காவது நோய் பாதிப்பு இருந்தாலோ, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், தாமதமாக திருமணம் ஆனவர்கள், மாதவிடாய் பாதிப்பு உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபகர் மோகன் சி. லாசரஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story