நாமக்கல்: இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு
இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
நாமக்கல் ஜோடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில், ஆடு மேய்க்கச் சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story