பூச்செடிகள்- மூலிகைகளுக்கு பெயர் பலகை


பூச்செடிகள்- மூலிகைகளுக்கு பெயர் பலகை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:45 AM IST (Updated: 19 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்செடிகள், மூலிகைகளுக்கு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்செடிகள், மூலிகைகளுக்கு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை அறிவியல் நிலையம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு புது ரக நெல் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி அறிவியல் நிலையத்தில் பரண் மேல் ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, குட்டை, நெட்டை தென்னை வளர்ப்பு, வாழை வளர்ப்பு மற்றும் அனைத்து வகையான தோட்டப்பயிர்களை வளர்த்து பராமரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

பெயர் பலகை

மண் புழு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் நடந்து வருகிறது. விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேராசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள், மூலிகை பயிர்கள் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் மாணவர்கள், விவசாயிகள் பூச்செடிகள் மற்றும் மூலிகைகளின் பெயர்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகை தயாரித்து அந்தந்த செடிகளின் அருகே வைக்கப்பட்டுள்ளது.


Next Story