வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்: தொழிலாளர் உதவி ஆணையர்


வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்: தொழிலாளர் உதவி ஆணையர்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெயர் பலகை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். அதனை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் மீது உரிய சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், மற்றும் இதர மொழிகளில் பெயர்கள் இருக்கும்பட்சத்தில், எழுத்து மற்றும் எழுத்துக்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் எழுத்துக்கள் முன்னுரிமை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

நடவடிக்கை

அதாவது தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் அடுத்ததாகவும், பிற மொழி அதற்கு கீழும் அமையுமாறு பெயர் பலகை இருக்க வேண்டும். இதனை பின்பற்றாத நிறுவனங்களின் மீது தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம், இதர தொடர்புடைய நிறுவனங்களின் அமலாக்க சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story