அரசு பள்ளிகளை மேம்படுத்த 'நம்ம ஸ்கூல்' திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்


அரசு பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
x

அரசு பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், "நம்ம ஸ்கூல்" என்னும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுவதோடு, இதற்கான இணையதளத்தையும் முதல்-அமைச்சர் நாளை அறிமுகம் செய்கிறார்.

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Next Story