'நம்ம ஊரு சூப்பரு' திட்ட தூய்மைப்பணிகள்


நம்ம ஊரு சூப்பரு திட்ட தூய்மைப்பணிகள்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட தூய்மைப்பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட தூய்மைப்பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

'நம்ம ஊரு சூப்பரு'

குடவாசல் அருகே மஞ்சக்குடி, 51 புதுக்குடி ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பர் திட்ட தூய்மைப்பணியினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

அதன்படி மஞ்சக்குடி ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பர் திட்டம் மூலம் அரசு துறை அலுவலகங்களான ஊராட்சி கட்டிடம், பள்ளி வளாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சுகாதார வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள், வீதிகள், தெருக்கள், கழிவுநீர் வாய்க்கால் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

தூய்மைப்பணிகள்

அப்போது இப்பகுதியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு சீருடைகள் வழங்கி நம்ம ஊரு சூப்பர் திட்டம் மூலம் சுற்றுப்புற தூய்மை பணியை சிறப்பாக செய்திட வேண்டும் என்று கூறினார். அதேபோல 51 புதுக்குடி ஊராட்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து அங்குள்ள சுகாதார வளாகத்தினை ஆய்வு செய்தார். மேலும் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி எப்படி உள்ளது என்றும் கேட்டறிந்தார்.

அப்போது செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மாவட்ட தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், ஊராட்சி தலைவர்கள் (மஞ்சக்குடி) வனிதா கண்ணதாசன், (புதுக்குடி) கண்ணன், ஒன்றிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில் ஊராட்சி செயலர்கள் வெற்றி, லோகநாதன் ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story