'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விளக்கக் கூட்டம்


நம்ம ஊரு சூப்பரு திட்ட விளக்கக் கூட்டம்
x

கே.வி.குப்பத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.

வேலூர்

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில் தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, இ.கோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட விளக்க உரை ஆற்றினர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி?, சுகாதார கழிவு மேலாண்மை, ஒட்டுமொத்த தூய்மை, பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை தூய்மையாக வைத்துக் கொள்னவதற்கான வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.


Next Story