'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம்


நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கம்
x

சிக்கல் அருேக தேவூரில் ‘நம்ம ஊரு சூப்பரு’ சிறப்பு இயக்கத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

சிக்கல் அருேக தேவூரில் 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம்

தமிழக அரசின் ஆணைப்படி, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறங்கள். ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன், பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கை தரத்திற்கு இன்றியமையாதது.

இதனால் தற்போது ஊராட்சிகளில் சுகாதாரம், திட, திரவ கழிவுகள் மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு முறையான வசதி இல்லாத கிராமப்புறங்களில் பொது சுகாதாரம், குழந்தை இறப்பு, சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் இவற்றுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பதற்கு 'நம்ம ஊரு சூப்பரூ' சிறப்பு இயக்கம் சார்பில் நேற்று முதல் தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி வரை நடக்கிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து ‌சிக்கல் மெயின் சாலையில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, சிக்கல் ஊராட்சி தலைவர் விமலா ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

துண்டு பிரசுரம்

தேவூர் ஊராட்சி கடைத்தெருவில் 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, தேவூர் ஊராட்சி தலைவர் வைதேகிராசு, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story