நந்தா கல்லூரியில்'மாபெரும் தமிழ்க்கனவு' பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி


நந்தா கல்லூரியில்மாபெரும் தமிழ்க்கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
x

நந்தா கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது

ஈரோடு

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் தமிழக உயர்கல்வி துறை- தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் 'மாபெரும் தமிழ்க்கனவு' என்ற பெயரில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 1000 கல்லூரிகளை சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்று அடையும் வகையில் 100 இடங்களில் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக நிகழ்வுகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் மரபின் வளமை, பண்பாட்டு செழுமை, சமூக சமத்துவம், பொருளாதார மேம்பாட்டு வாய்ப்பு ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்வதாக இந்த பரப்புரை திட்டம் அமைந்து உள்ளது.

சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் சென்று அடையும் வகையில் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடந்தது. துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி ரெங்கநாதன், கல்லூரி துணை முதல்வர் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 9 கல்லூரிகளை சேர்ந்த 750 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். பேச்சாளர் பவா செல்லத்துரை கலந்து கொண்டு நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசினார். உயர்கல்வி வழிகாட்டி, தமிழ்பெருமிதம் ஆகிய கையேடுகள் வழங்கப்பட்டன.


Next Story