பீஞ்சமந்தை ஊராட்சியில்சாலை ெதாடக்க விழா ஏற்பாடுகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு


பீஞ்சமந்தை ஊராட்சியில்சாலை ெதாடக்க விழா ஏற்பாடுகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு
x

பீஞ்சமந்தை ஊராட்சியில்‌சாலை ெதாடக்க விழா ஏற்பாடுகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

வேலூர்

பீஞ்சமந்தை ஊராட்சியில்சாலை ெதாடக்க விழா ஏற்பாடுகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி பல ஆண்டு காலமாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சாலை வசதி என்பது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருந்து வந்தது.

இதுபற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பல முறை பேசியதன் எதிரொலியாக ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முத்துக்குமரன் மலையில் இருந்து பீஞ்சமந்தை வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை தொடக்க விழாவும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. விழாவில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதால் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் விழா ஏற்பாடுகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுதாகரன், ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், ஒடுகத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் ராமு, ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story