நந்தன் கால்வாய் - சாத்தனூர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்பாதுகாப்பு இயக்க விழாவில் வலியுறுத்தல்


நந்தன் கால்வாய் - சாத்தனூர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்பாதுகாப்பு இயக்க விழாவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நந்தன் கால்வாய் - சாத்தனூர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாதுகாப்பு இயக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரம்


செஞ்சி,

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை இணைத்து செயல்படும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் ஐம்பெரும் விழா பனமலைப்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கன்னிகார் ரமேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி கலந்து கொண்டு பேசினார்.

இதில் நந்தன் கால்வாய் சாத்தனூர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், நந்தன் கால்வாயை முறைப்படுத்தப்பட்ட பாசன கால்வாயாக அறிவிப்பது, ஆண்டுதோறும் அதை பராமரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா, காவிரி கடைமடை விவசாய ஒருங்கிணைப்பு சங்கத்தின் செயலாளர் பிரபாகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரமேஷ், கனகராஜ், தினேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.


Next Story