நாங்குநேரி சம்பவம் : பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு


நாங்குநேரி சம்பவம் :  பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
x

மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமூகநீதிக்கான அரசு இது எனவும் , பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


Next Story