விவசாயிகளுக்கு நானோயூரியா பயன்பாடு பயிற்சி
கே.சிவஞானபுரத்தில் விவசாயிகளுக்கு நானோயூரியா பயன்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் கே.சிவஞானபுரம் கிராமத்தில் நானோயூரியா பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தைச் சார்ந்த பேராசிரியர் சுமதி, வேளாண்மை அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஒரு மூட்டை யூரியா உரத்திற்கு மாற்றாக 500 மில்லி நானோ யூரியா ஒரு ஏக்கருக்கு ேபாதுமானுது. எனவே, அனைத்து பயிர்களுக்கும் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 2-4 மில்லி நானோ யூரியா கலந்து தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு செயல் விளக்க திட்ட பயிற்சி அளிக்க ப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் 500 மில்லி நானோ யூரியா வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேணி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.