நரசிம்ம அவதார தின விழா


நரசிம்ம அவதார தின விழா
x

நெல்லை இஸ்கான் கோவிலில் நரசிம்ம அவதார தின விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று நரசிம்ம அவதார தின விழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலையில் கிருஷ்ணர், பலராமர் லட்சும நரசிம்மர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.

இதைத்தொடர்ந்து 9 கலசங்களில் விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன. பின்னர் வலம்புரி சங்கால் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு நரசிம்மர் அவதரித்த வேளையில் பல வண்ண பூக்களால் புஷ்பாபிஷேகம், பூர்ணகும்ப ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story