பெருமாள் கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி


பெருமாள் கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி
x

பெருமாள் கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி விழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

நரசிம்ம ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தாயில்பட்டி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல ஏழாயிரம்பண்ணையில் விண்ணகர பெருமாள் கோவில், செவல்பட்டி மலையில் மீது உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில், சிப்பிப்பாறை மலையின் மீது உள்ள பெருமாள் ேகாவில்களிலும் நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


Next Story