பூஞ்சப்பரத்தில் நாராயண சுவாமி பவனி
உடன்குடி சந்தையடியூரில் பூஞ்சப்பரத்தில் நாராயண சுவாமி பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் நாராயண சுவாமி கோவிலில் ஆடி, ஆவணி மாத பால்முறை திருவிழாவையொட்டி கடந்த 14-ந் தேதி மாலையில் அய்யா அன்ன வாகன பவனியும், தொடர்ந்து விழா நாட்களில் அய்யா நாக வாகனம், குதிரை வாகனம், கருடன், அனுமார், வாகனங்களில் பவனி வருதல், தர்மம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, உம்பான் தர்மம் வழங்கல், சந்தனக்குடம் பவனி, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பால் வைத்தல், அய்யா அலங்கரிப்பட்ட பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மக்கள் சுவாமிக்கு சுருள் வைத்தனர். ஏற்பாடுகளை ஊர் மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story