நாராயணசுவாமி நிழல்தாங்கலில்பால்முறை திருவிழா


நாராயணசுவாமி நிழல்தாங்கலில்பால்முறை திருவிழா
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேலநடுவக்குறிச்சியில் நாராயணசுவாமி நிழல்தாங்கலில் பால்முறை திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

மேலநடுவக்குறிச்சி நாராயண சுவாமி நிழல்தாங்கலில் பால்முறை திருவிழா 30-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. முதல் நாள் காலை, இரவு அய்யாவுக்கு பணிவிடையும், இரவு 9 மணிக்கு உம்பான் தர்மம் நடந்தது. 2-ஆம் நாள் காலை, மதியம், இரவு அய்யாவுக்கு பணிவிடை நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. 3-ஆம் நாள் காலை 10 மணி, 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. மதியம் 2 மணிக்கு பால் இளக்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்குதல் நடந்தது. இதில் அய்யா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்திருவிழாவில் திரளான அன்புகொடிமக்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story