இலங்கைக்கு கடத்திய பல கோடி ரூபாய் போதை பவுடர்கள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்திய பல கோடி ரூபாய் போதை பவுடர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு நாட்டு படகில் கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பவுடர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுெதாடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு நாட்டு படகில் கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பவுடர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுெதாடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

92 கிலோ போதை பவுடர்

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா, கடல் அட்டை உள்ளிட்ட பல பொருட்கள் கடத்துவது தொடர்கின்றது. இந்த நிலையில் தலைமன்னார் கடல் பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைமன்னார் கடல் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு படகை நிறுத்த முயன்றனர். ஆனால் கடற்படையினரை கண்டதும் அந்த படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அந்த படகை வேகமாக சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் படகில் ஏறி சோதனை செய்த போது அதில் சுமார் 95 பார்சல்களில் கஞ்சா பூவால் தயாரிக்கப்பட்ட 92 கிலோ போதை பவுடர்கள் இருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து 92 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு போதை பவுடரை கடத்தி வந்ததாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், போதை பவுடரை கடத்த பயன்படுத்திய நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் முழு விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியில் ராமேசுவரத்தில் உள்ள மத்திய, மாநில, க்யூ பிரிவு போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பவுடருடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story