குறுகலான பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்


குறுகலான பாலத்தால்   விபத்து ஏற்படும் அபாயம்
x

குறுகலான பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

திருப்பூர்

குடிமங்கலம்,

பெதப்பம்பட்டியில் இருந்து இலுப்ப நகரம் செல்லும் சாலையில் பி.ஏ.பி. கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் கிராம இணைப்பு சாலையாக உள்ளது. பெதப்பம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பாலத்தின் வழியாக தினமும் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. பி.ஏ.பி கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. சாலையின் திருப்பத்தில் பாலம் அமைந்து உள்ளதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பாலத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் மோதி சுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. விவசாயிகள் தங்களது விளை பொருள்களை இந்த பாலத்தின் வழியாக கொண்டு செல்கின்றனர். இதனால் பழுதான பாலத்தை சீரமைப்பது மட்டுமல்லாமல் பி.ஏ.பி. கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை விரிவுபடுத்தவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Related Tags :
Next Story