வீட்டுமனை பட்டா கேட்டு நாதஸ்வர, தவில் கலைஞர்கள் கோரிக்கை


வீட்டுமனை பட்டா கேட்டு நாதஸ்வர, தவில் கலைஞர்கள் கோரிக்கை
x

நெமிலியில் வீட்டுமனை பட்டா கேட்டு நாதஸ்வர, தவில் கலைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

ராணிப்பேட்டை

நெமிலி பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, நெமிலி நாதஸ்வரம், தவில் குழுவில் உள்ள 180 இசைக் கலைஞர்களுக்கு பைகள் வழங்கினார். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்தனர். அதற்கு ஒன்றியக் குழு தலைவர், அமைச்சர் ஆர்.காந்தியிடம் கூறி, பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு மற்றும் நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story