தேசிய திறனறிவு தேர்வை 7,514 மாணவர்கள் எழுதினர்


தேசிய திறனறிவு தேர்வை 7,514 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 மையங்களில் தேசிய திறனறிவு தேர்வை 7,514 மாணவர்கள் எழுதினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 மையங்களில் தேசிய திறனறிவு தேர்வை 7,514 மாணவர்கள் எழுதினர்.

தேசிய திறனறிவு தேர்வு

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்.எம்.எம்.எஸ்.) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக ஆண்டுதோறும், நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

7,514 மாணவர்கள் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இந்த தேர்வு கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில் 27 மையங்களில் நடைபெற்றது. இதற்காக 7,697 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 7,514 மாணவ, மாணவிகள் எழுதினர். 183 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வை கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர்.


Next Story