விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வு


விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வு
x

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது.

விழுப்புரம்

அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்திட்டத்தின் கீழ் திறனறிவு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் 9,257 மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்திட்டத்தின் கீழ் திறனறிவு தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் நடந்த இத்தேர்வை 5,765 மாணவ- மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 3,492 பேரும் என மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9,257 மாணவ- மாணவிகள் எழுதினர். விழுப்புரத்தில் நடந்த இத்தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




Next Story