தேசிய திறனாய்வு தேர்வு:நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்ச்சி


தேசிய திறனாய்வு தேர்வு:நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்ச்சி
x

தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்று, சாதனைபடைத்துள்ளனர். இந்த 11 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நாடார் உறவின்முறை சங்க செயலாளர் எஸ்.ஆர். ஜெயபாலன், பள்ளிச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்று பேசினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராசு கலந்து கொண்டு தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், பள்ளிக் குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, ரவிச்சந்திரன். பள்ளி முன்னாள் பொருளாளர் செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள்காந்தராஜ் நன்றி கூறினார்.


Next Story