தேசிய திறனாய்வு தேர்வு:திருச்செந்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை


தேசிய திறனாய்வு தேர்வு:திருச்செந்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய திறனாய்வு தேர்வில் திருச்செந்தூர் பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்துள்ளனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் ச.சிவகுகன், செ.ஸ்ரீராம், லி.சசிராஜ், ர.சுடலைமுத்து, மாணவி ஆ.கிருத்திகா ஆகிய 5 பேர் 2022-23 க்கான தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகையாக கிடைக்கும். வெற்றி பெற்ற மாணவர்களை திருச்செந்தூர் வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன், பள்ளி செயலாளர் ர௱மச்சந்திரன், தலைமையாசிரியை உஷா, ஆசிரியைகள் குணசுந்தரி, சாந்தி, காளீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.


Next Story