சிறந்த இளம் மருத்துவருக்கான தேசிய விருது


சிறந்த இளம் மருத்துவருக்கான தேசிய விருது
x

திருப்பத்தூரை சேர்ந்த மருத்துவருக்கு சிறந்த இளம் மருத்துவருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

இந்திய மருத்துவ சங்கத்தின் 97-வது தேசிய மாநாடு மற்றும் மருத்துவ கண்காட்சி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூரை சேர்ந்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் எம்.அருண்குமார் மருத்துவத்துறையில் ஆற்றிய சேவைகளை பாராட்டி சிறந்த இளம் மருத்துவருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உலக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மெடிக்கல் கவுன்சில் தந்தை என போற்றப்படுபவருமான டாக்டர் கேதன்தேசாய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் இளம் மருத்துவர்கள் மாநில பொதுச் செயலாளர் ஆசித், தேசிய தலைவர் சஜானந்த் பிரசாத் சிங், செயலாளர் ஜெயேஸ் லீலே, தேசிய கலைவர் சரத் அகர் ஆண்டின் தேசிய தலைவர் அசோகன், காமன்வெல்த் செயலாளர் ஜெயலால், டாக்டர்கள் செந்தமிழ்பாரி, அபுல் காசன், பழனிசாமி,தியாகராஜன், பிரகாசம், ராசா, அன்புக்கரசு, இந்திய மருத்துவ சங்க இளம் கார்த்திக் பிரபு மற்றும் இளம் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு டாக்டர் அருண்குமார் மற்றும் ராணுவ வீரர்களுகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கேதார்நாத் போன்ற புகழ்பெற்ற மலைக் கோயில்கள் உள்ளன ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளை சிறப்பாக பணியாற்றி சேவை புரிந்த டாக்டர்கள், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் உத்தரகாண்ட் அரசு விருதுகளை வழங்கியது. உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் கேதாரிநத்தில் மருத்துவ சேவை புரிந்ததற்காக டாக்டர் எம்.அருண் குமாருக்கு, உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் டாமி விருது வழங்கி, பாராட்டி பேசினார்.

அவர் பேசியதாவது:- மிகப்பெரிய நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது உத்தரகாண்ட் மாநிலம். ஆண்டுதோறும் உலகம் அனைத்திலும் இருந்து பல கோடி மக்கள் ஆன்மிக சுற்றுலா வந்து செல்கிறார்கள். 1200 அடிக்கு மேல் அமைந்திருக்கும் கோவில்களுக்கு மைனஸ் 8 டிகிரி வெப்ப நிலையில் மருத்துவ உதவி ஆற்றி வரும் செயல்பாடுகள் வியப்புக்குறியது. மருத்துவ சேவை புரிந்த டாக்டர்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. மேலும் எல்லா நிலையிலும் உத்தரகாண்ட் மாநில அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் சிக்சிமா ஹெல்த் கேர் தலைவர் டாக்டர் பிரதீப் பர்டுவாஜ், இயக்குனர் அனிட்டா பர்டுவாஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story