திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியற் கல்லூரியில் தேசிய கணினித்துறை கருத்தரங்கம்


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியற் கல்லூரியில் தேசிய கணினித்துறை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 16 Jun 2022 6:46 PM IST (Updated: 16 Jun 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியற் கல்லூரியில் தேசிய கணினித்துறை கருத்தரங்கம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினித்துறை மற்றும் தேசிய கணினித்துறை சார்பில், 'கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணினி துறை பேராசிரியை ஜெமி புளோரினபெல் வரவேற்று பேசினார்.

பெங்களூரு டெக் லீட் சிங்காரி நிறுவன அதிகாரி அருள் ஜெப ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மென்பொருள் துறையில் சேவை, உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில், உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கருத்தரங்கில் 45 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கணினி துறை பேராசிரியர்கள் ஜெமி புளோரினபெல், சரவணகுமார், ஆனந்தி, ஜென்சி, கேசவராஜா, சந்தியா, சிந்து, பவானி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு கட்டுரைகளை ஆராய்ந்து வழிகாட்டினர். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கணினி துறையின் மாணவர் சங்கங்களான சி.எஸ்.ஐ., ஐ.இ.ஐ., ஸ்கேன் ஆகியவற்றில் இந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும், அந்த சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார்.

----


Next Story