தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு


தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு
x

மோட்சவாடி, எஸ்.வி.நகரத்தில் தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மோட்சவாடி கிராமத்தில் தேசிய டெங்கு தின அனுசரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. செய்யாறு சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

செய்யாறு சுகாதார பூச்சியியல் வல்லுனர் துரைராஜ், டாக்டர் அருள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் டெங்கு கொசு குறித்து பொதுமக்களுக்கு வினாடி வினா நடத்தி சரியான பதில் கூறிய 5 பேருக்கு தலா ரூ.100 வீதம் வழங்கப்பட்டது. மேலும் டெங்குதின உறுதிமொழியும் ஏற்றனர்.

பின்னர் கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டது.

இதேபோல் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் தலைமையில் தேசிய டெங்கு நோய் தடுப்பு தினம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

எஸ்.வி நகரம், அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், இரும்பேடு, மாமண்டூர், ஒண்டிகுடிசை, வேலப்பாடி ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் விதம், டெங்கு நோய் பரவுவது குறித்தும், கொசு உற்பத்தி இடங்களை கண்டறிந்து அழிப்பதன் மூலம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் எஸ்.வி.நகரம் மருத்துவ அலுவலர் சுஸ்ருதா, அக்ராபாளையம் மருத்துவ அலுவலர் ஆனந்த், கண்காணிப்பாளர் நடராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story