தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு


தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு
x

திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர்.

ராணிப்பேட்டை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக மாவட்ட நிர்வாகங்கள் கேட்டு கொண்டதின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் திண்டுக்கல், தேனி, நீலகிரி மற்றும் ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் அதி நவீன மீட்பு கருவிகளுடன் குழுவிற்கு 22 பேர் வீதம் 4 குழுவினர் விரைந்தனர்.


Next Story