தேசிய பேரிடர் மீட்புப்படையில் வீர வணக்க நாள்


தேசிய பேரிடர் மீட்புப்படையில் வீர வணக்க நாள்
x

தேசிய பேரிடர் மீட்புப்படையில் வீர வணக்க நாள் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் மீட்புப் படை கமாண்டண்ட் அருண் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story