50 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடி


50 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடி
x

தளி ஒன்றியத்தில் வீடுகளில் ஏற்றுவதற்காக 50 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடிகளை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து தளி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலும் வீடுகளில் ஏற்றுவதற்காக தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி தளி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிக்குமார் ஆகியோர் ஊராட்சி தலைவர்களிடம் தேசிய கொடிகளை வழங்கினர். அந்ததந்த ஊராட்சிகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசிய கொடிகள் வழங்கப்பட்டன. தளி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளுக்கு மொத்தம் 52 ஆயிரம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story