15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி


15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி
x

தர்மபுரி விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் 15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களை கொண்டு மாணவர்கள் தேசிய கொடி உருவாக்கினர்.

தர்மபுரி

தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் இணை நிறுவனமான ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி 120 மாணவர்கள் ஒருங்கிணைந்து 15 ஆயிரம் வர்ணம் தீட்டப்பட்ட பேப்பர் டம்ளர்களை கொண்டு தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்தனர். 75-வது சுதந்திர தின பவள விழாவை போற்றும் வகையில் 75 நிமிடங்களில் 21 அடி நீளமும், 31.5 அடி அகலமும் கொண்ட தேசிய கொடி உருவாக்கப்பட்டது. மேலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் மழலையர் பள்ளி மாணவர்கள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து விழாவை சிறப்பித்தனர். இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் டி.என்.சி.மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் ஷ்ரவந்திதீபக், டாக்டர் திவ்யா ராம்குமார், பள்ளி டீன்கள் கவுசல்யா, சம்பத்குமார் மற்றும் முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story