கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியேற்றினார்
கிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.
சுதந்திர தின விழா
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காவல் துறை, ஊர் காவல் படை, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்று கொண்டார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களை அவர் பறக்க விட்டார்.
பாராட்டு சான்றிதழ்கள்
தொடர்ந்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை, சமூக பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 57 பேருக்கு ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 890 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்பு துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூல துறை, வனத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 217 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி அரசு மகளிர், புனித அன்னாள், டி.கே.சாமி, டிரினிடி, பாரத், டான் பாஸ்கோ, கேம்பிரிட்ஜ் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, வன அலுவலர் கார்த்திகேயனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி, உதவி கலெக்டர் சதீஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.