தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை


தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி  தலைமை ஆசிரியை
x

சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை கல்வி அலுவலர் நடத்த உத்தரவிடப்பட்டது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது தேசிய கொடியை தலைமை ஆசிரியை தமிழ்செல்வி ஏற்றுவதற்கு பதில் ஆசிரியர் முருகனை ஏற்ற சொன்னார். தலைமை ஆசிரியர் தான் தேசிய கொடியை ஏற்றவேண்டும் என்று பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, தான் பின்பற்றும் மத நம்பிக்கையில் தான் தேசிய கொடியை ஏற்றவில்லை. என்னால் வேறு எந்த அடையாளத்தையும் வணங்க முடியாது என்பதால், தேசிய கொடியை ஏற்றாமல் வேறு ஒரு ஆசிரியரை ஏற்ற கூறினேன். ஆனால் நான் தேசிய கொடிக்கு மதிப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.


Next Story