வேலூரில் தேசியகொடி விழிப்புணர்வு ஊர்வலம்


வேலூரில் தேசியகொடி விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேலூரில் தேசியகொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மக்கான் சிக்னல் அருகே நேற்று நடந்தது. வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கி சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் மக்கான் சிக்னல் அருகே இருந்து புறப்பட்டு வடக்கு, தெற்கு போலீஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக சென்று கோட்டை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு அரசு, தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ஊர்வலத்தில் வேலூர் தாசில்தார் செந்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story