அரசு பள்ளியில் இரவில் பறந்த தேசியக்கொடி


அரசு பள்ளியில் இரவில் பறந்த தேசியக்கொடி
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாதானம் கிராமத்தில் அரசு பள்ளியில் இரவில் தேசியக்கொடி பறக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

குடியரசு தின விழாவையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரிகளில் நேற்று முன்தினம் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவைெயாட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடி மாலையில் இறக்காமல் இரவில் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story