திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி


திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
x

திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி இன்று (சனிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை அனைத்து வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடும் வகையில் தேசிய கொடியை பொதுமக்களுக்கு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கி பொது மக்களுக்கு தேசிய கொடி வழங்கினார். நகராட்சி ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், ஆனந்தராமச்சந்திரன் மற்றும் களப்பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story