களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்குஇருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியேற்றி பேரணி

களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்குஇருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியேற்றி பேரணி
x

களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்குஇருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியேற்றி பேரணி நடந்தது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்குஇருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியேற்றி பேரணி நடந்தது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன தேசியக் கொடி பேரணி நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திர அமைப்பாளர் விஷ்ணு தலைமை தாங்கினார். பேரணியை ராணுவ வீரர் வனஜெயன் நாயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏ.பி.வி.பி. அமைப்பின் மாநில செயலாளர் சவிதா ராஜேஷ், கல்லூரி மாணவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திரன், மேல்புறம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சி.எஸ். சேகர், பொதுச் செயலாளர் எஸ்.ஆர். சரவணவாஸ் நாராயணன், கட்சியின் மாவட்ட பொதுச் செயலர்கள் சி.எம். சஜூ, ஆர்.டி. சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story