சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி விற்பனை
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி விற்பனை தொடங்கியது.
வேலூர்
இந்தியாவின் 76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை கொண்டாடும் வகையில் வேலூர் அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட தபால் நிலையம், துணை தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனைக்காக சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டது. தலைமை தபால் நிலைய அதிகாரி முரளி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் வீரன், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தேசிய கொடி வாங்கி சென்றனர். இதில் தபால்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story